பெண் காவலரை தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு

கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை தாக்கியதாக ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி
Published on

மும்பை:

மும்பை அலிபாக் பகுதியில் 2018ம் ஆண்டு இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அர்னாப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை அர்னாப் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிஆர்பி முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அர்னாப் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com