அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி
Published on

மும்பை:

மும்பை அலிபாக் பகுதியில் 2018-ம் ஆண்டு இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அர்னாப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை அர்னாப் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற அர்னாப் கோஸ்வாமியை அலிபாக் மாவட்ட நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அங்கு அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com