காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - ராணுவ வீரர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ரஜிப் தாபா
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ரஜிப் தாபா
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கூர்க்கா ரைபிள் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர் ரஜிப் தாபா (34), படுகாயம் அடைந்து வீர மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com