காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ அதிகாரி வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பூர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி வீரமரணம் அடைந்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஸ்ரீநகர்:

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கத்துவா மாவட்டத்தில் உள்ள  ராம்பூர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி வீரமரணம் அடைந்தார்.

இதேபோல் ஊரி அருகில் உள்ள ஹாஜிப்பீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அருகாமையில் உள்ள இந்திய கிராமத்தை சேர்ந்த இருவர் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com