காஷ்மீர்: பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் மரணம்

காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
காஷ்மீர்: பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் மரணம்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் முள்கம்பி வேலியோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது இன்று பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிகளால் சுட்டு ஆவேச தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்திய வீரர்களும் தீரத்துடன் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பு மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com