இந்தியா - சீனா ராணுவத்துக்கு இடையே விரைவில் ஹாட்லைன் சேவை: ராணுவ தளபதி பிபின் ராவத்

இந்தியா மற்றும் சீனா ராணுவத்துக்கு இடையே விரைவில் ஹாட்லைன் சேவை தொடங்கப்பட உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா ராணுவத்துக்கு இடையே விரைவில் ஹாட்லைன் சேவை: ராணுவ தளபதி பிபின் ராவத்
Published on

புதுடெல்லி:

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா மற்றும் சீனா நாடுகளின் ராணுவத்துக்கு இடையில் விரைவில் ஹாட்லைன் சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் இரு நாட்டு எல்லைகளில் நடக்கும்  நிகழ்வுகள் குறித்து உடனடியாக தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

ஹாட்லைன் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய ராணுவம் எடுத்து வருகிறது. சீனா ராணுவமும் இதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.

ஏற்கனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே ஹாட்லைன் சேவை  செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com