ராணுவ தளபதி நரவனே சியாச்சினில் வீரர்களுடன் சந்திப்பு

புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் முகுந்த் நரவனே, இன்று சியாச்சின் சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார்.
வீரர்களை சந்தித்த ராணுவ தளபதி நரவனே
வீரர்களை சந்தித்த ராணுவ தளபதி நரவனே
Published on

ஸ்ரீநகர்:

இந்திய ராணுவத்தின் 28-வது தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே, டெல்லி தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி பதவி ஏற்றார். அவரிடம் பணி நிறைவு செய்த பிபின் ராவத் பொறுப்பை ஒப்படைத்தார். 13 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் நரவனே.


இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணுவ தளபதி நரவனே, தனது அதிகாரப்பூர்வ முதல் பயணமாக இன்று சியாச்சின் பனிமலைக்கு சென்றார்.

அங்குள்ள ராணுவ வீரர்களுடன் தளபதி நரவனே கலந்துரையாடினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com