முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார் பிபின் ராவத்

முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிபின் ராவத்
பிபின் ராவத்
Published on

புதுடெல்லி:

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கடந்த 15-8-2019 அன்று சுதந்திர தின உரையாற்றும்போது, ராணுவம் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

அப்போது, விரைவில் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே தளபதியை நியமிக்க ஒப்புதல் அளித்தது. 

இதையடுத்து, முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிபின் ராவத்தின், ராணுவ தளபதி பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைந்து ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com