பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவர் கைது

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவரை ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on

ஜம்மு:

ரஜோரி மாவட்டம், நவ்ஷேரா பகுதியில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் கலால் என்ற இடத்தின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியதை கவனித்து அவரை கைது செய்தனர்.

பிடிபட்ட நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பாகிஸ்தானின் எந்தப் பகுதியை சேர்ந்தவர்? இந்தியாவுக்குள் ஊடுருவிய நோக்கம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com