

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ராணுவ மேஜர் நிகழ்ச்சி முடிந்த பின் பெண் பேராசிரியை ஒருவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். மாநாட்டிலிருந்து தனது கல்லூரி விடுதிக்கு சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை குடிபோதையில் இருந்த மேஜர் காரை விட்டு வெளியே இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெண் பேராசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், ராணுவ மேஜர் மற்றும் விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இருவரும் பெண் பேராசிரியர் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்து அவர் அறைக்கதவை தட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராணுவ மேஜர் பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews