மகாராஷ்டிராவில் ரூ.13 கோடி மதிப்பிலான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் பறிமுதல்

மகாராஷ்டிராவில் ரூ.13 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் வைத்திருந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Published on

பால்கர்:

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் சிலார் பாடா பகுதியில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த இருவரை சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்ததில் அதிக அளவிலான ஆயுதங்களும், போதைபொருட்களும் சிக்கின. 

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், “உயர் ரக துப்பாக்கியான ஏகே 47, கைத்துப்பாக்கிகள், மற்றும் 21 கிலோ அளவிலான போதைப்பொருட்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.13.61 கோடி ஆகும். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுத கடத்தல்களில் ஈடுபடுபவர்களா அல்லது வேறு விதமான குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களா? என விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com