அரியாங்குப்பத்தில் பாம்பு கடித்ததில் பெண் பலி

அரியாங்குப்பத்தில் பாம்பு கடித்ததில் பெண் பரிதாபமாக இறந்து போனார்.
மரணம்
மரணம்
Published on

பாகூர்:

அரியாங்குப்பம் கோட்டைமேடு எம்.ஜி.ஆர். நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் வேலு. இவரதுமனைவி அலமேலு (வயது43). இவர்கள் ஏற்கனவே வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறுவீட்டில் குடியேற அலமேலு முடிவு செய்தார்.

சம்பவத்தன்று மாலை அந்த பகுதியில் புதிய வாடகை வீட்டை தேர்வு செய்ய சென்றார். அப்போது அங்குள்ள புதரில் இருந்த கட்டுவீரியன் பாம்பு அலமேலுவை கடித்து விட்டது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அலமேலு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com