அரியலூர் அருகே தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பெரியநாகலூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் சின்னத்துரை(வயது 37). இவருக்கும், அதே பகுதி கிழக்கு தெருவை சேர்ந்த கருப்புசாமி மகன் சேகர்(44), மற்றும் இவரது மகன் சுதாகர்(21) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சின்னத்துரை தனது மனைவி செல்வியுடன் தந்தை கருப்புசாமி வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சுதாகர், அவரது தந்தை சேகர், உறவினர்கள் செல்வராஜ்(30), திருநாவுக்கரசு(28) ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்னத்துரை, அவரது மனைவி செல்வி, தாய் அமிர்தவள்ளி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து, சுதாகர், சேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்து மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com