அரிமளம் அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

அரிமளம் அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

அரிமளம்:

அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 60). விவசாயியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை மடத்துபட்டி கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அரிமளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசப்பன், என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com