

ஆற்காடு:
ரத்தினகிரியை அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு சிறுநீர் கழிக்க வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது சண்முகத்தை பாம்பு கடித்து உள்ளது. உடனடியாக அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.