ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஆற்காடு:

ஆற்காடு டவுன் போலீசார் நேற்று மாலை ஆற்காட்டில் இருந்து கலவை செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 21) என்பதும், அவர், ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆற்காட்டில் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சூரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com