விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

அரவக்குறிச்சி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடுத்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீடு கொள்ளை
வீடு கொள்ளை
Published on

அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சொக்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 63) விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் நீண்டநேரம் கழித்து ராஜாமணி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்பு பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாமணி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டினில் உள்ள ஒரு அறையின் பீரோவில் இருந்த 2 பவுன் தங்கசங்கலி, ரூ.6,750-ஐ மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜாமணி அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து ராஜாமணி அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com