அரவக்குறிச்சி அருகே வாகனம் மோதி பெண் பலி

அரவக்குறிச்சி அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி அருகே வாங்கலாய்புதூர் அருகில் அரவக்குறிச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com