அரக்கோணம் அருகே சூதாடிய 2 பேர் கைது

அரக்கோணம் அருகே சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அரக்கோணம்:

அரக்கோணம், அன்வர்திக்கான் பேட்டையில் அரக்கோணம் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மாரிமங்கலம் காமராஜர் சிலை அருகில் நின்றிருந்த அன்வர்திகான்பேட்டை பெரிய தெருவை சேர்ந்த பிரபு (வயது 37), முத்து (62) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com