அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே செஞ்சி பனப்பாக்கம்-கடம்பத்தூர் இடையே உள்ள ரெயில் பாதையில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பலத்த காயத்துடன் கிடந்தார். தகவல் அறிந்ததும், அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த நபரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com