அரக்கோணம் டாஸ்மாக் கடையில் ரூ.1.20 லட்சம் கொள்ளை

அரக்கோணத்தில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
அரக்கோணம் டாஸ்மாக் கடையில் ரூ.1.20 லட்சம் கொள்ளை
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் டவுன் சோளிங்கர் சாலையில் உள்ள குமினிபேட்டையில் டாஸ்மாக் கடை உள்ளது. விற்பனையாளர் ரமேஷ் நேற்று இரவு மதுவிற்ற பணத்தை அங்குள்ள மேஜையில் வைத்து விட்டு பூட்டி சென்றார். நள்ளிரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். மேஜையில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

அதிகாலை 3 மணிக்கு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர், ஏட்டு சதீஷ் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டனர். இது பற்றி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கைரேகைகள் சேகரிக்கபட்டன. கடையில் பணம் மட்டும் திருடபட்டுள்ளது. மது பாட்டில்கள் அப்படியே இருந்தன. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com