அரக்கோணம் அருகே கள்ளச்சாராயம் பறிமுதல்

அரக்கோணம் அருகே கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
கைது
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் நேற்று மாலை அரக்கோணம் அடுத்த பள்ளியாங்குப்பம் கிராமத்தில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சாமந்தி (வயது 42) என்பவர் முள் புதர் அருகே கள்ளசாராயம் விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்த போலீசார் அவரிடம் இருந்த 105 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமந்தியை ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com