விரைவில் இந்தியா வரும் அப்ரிலியா SR125

இந்தியாவில் 125 சிசி கொண்ட ஸ்கூட்டர் ஒன்றை அப்ரிலியா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்ரிலியா புதுவரவு ஸ்கூட்டர் சார்ந்த தகவல்களை கேரளாவை சேர்ந்த பியாஜியோ விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்தியா வரும் அப்ரிலியா SR125
Published on

புதுடெல்லி:

அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் 125 சிசி கொண்ட ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த பியாஜியோ விநியோகஸ்தர் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அப்ரிலியா SR125 மாடல் ஸ்கூட்டர் 12-இன்ச் அலாய் வீல் மற்றும் 125 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய SR150 மாடலில் 14-இன்ச் வீல் வழங்கப்பட்டிருந்தது. இதனால் புசிய ஸ்கூட்டரின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் விலை குறைந்த மாடல்களின் விற்பனை அதிகமாக இருக்கும். அப்ரிலியா SR150 விலை இந்தியாவில் தற்சமயம் ரூ.69,248 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறிய இன்ஜின் கொண்ட மாடல் ரூ.7000 முதல் ரூ.8000 வரை குறைக்கப்படலாம் என்பதால் சிறிய மாடலின் விலை ரூ.60,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்ரிலியா SR125 மாடலில் 3 வால்வ் கொண்டு நான்கு-ஸ்டிரோக் யுனிட் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 9.4 bhp மற்றும் 8.2 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோஷாக், ரியர் ஷாக் அப்சார்பர்களை கொண்டுள்ளது. இந்தியாவில் புதிய ஸ்கூட்டர் பியாஜியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com