அறங்காவலர்களை தேர்ந்தெடுக்கும் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் - தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாவட்டக் குழுவில் உறுப்பினர்கள் நியமித்திட இந்திய நாட்டின் பிரஜையாக உள்ள இந்து சமயத்தை சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ.10,00,000க்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறும் கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்திட மாவட்டக் குழு ஏற்படுத்திடும் பொருட்டு மாவட்டக் குழுவில் உறுப்பினர்கள் நியமித்திட இந்திய நாட்டின் பிரஜையாக உள்ள இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மேற்படி விண்ணப்பதாரர்கள் இந்து அறநிலையத்துறைச் சட்டப் பிரிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ள தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும். மேற்படி விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் 18.11.2021 அன்று அல்லது அதற்கு முன்பாவது திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.

இதர கூடுதல் விபரங்களை திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் திருப்பூர், அவிநாசி, தாராபுரம், பல்லடம், உடுமலை, ஊத்துக்குளி, காங்கேயம், மூலனூர், மடத்துக்குளம் சரக ஆய்வர் அலுவலகங்களில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com