ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண், காதல் கணவருடன் கோர்ட்டில் ஆஜர்

ஒட்டன்சத்திரம் அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண், காதல் கணவருடன் கோர்ட்டில் ஆஜரானார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கிருஷ்ணவேணி- அருண்
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கிருஷ்ணவேணி- அருண்
Published on

வடமதுரை:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புதுகாளாஞ்சிபட்டியை சேர்ந்தவர் அருண் (வயது 23). கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர், 17 வயது சிறுமியை கடத்தி சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது, 2 பேரும் ஒட்டன்சத்திரத்தில் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்க போலீசார் ஒட்டன்சத்திரம் சென்றனர்.

அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்டது 17 வயது சிறுமி அல்ல என்பதும் 19 வயது இளம்பெண் என்பதும், இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்துவதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் திண்டுக்கல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். 

பின்னர் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருடைய பெயர் கிருஷ்ணவேணி (19) என்பதும், பெற்றோர் புகார் கொடுத்தது போல் அவர் சிறுமி அல்ல என்பதும், அருணை 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. மேலும் அந்த பெண் தனக்கு 18 வயது நிறைவடைந்ததற்கான சான்றிதழையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதையடுத்து காதல் தம்பதியினரை அவர்கள் விருப்பப்படி வாழ கோர்ட்டு அனுமதித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com