மதுரை சிந்தாமணியில் அப்பள கம்பெனி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஒருதலை காதலால் மனம் உடைந்த அப்பள கம்பெனி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

மதுரை:

மதுரை சிந்தாமணி வ.உ.சி. தெருவைச்சேர்ந்தவர் சபரிபாண்டி (வயது26). இவர் அதே பகுதியில் உள்ள அப்பள கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சில வருடங்களாக சபரிபாண்டி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்த பெண் காதலை ஏற்க மறுத்து விட்டார். தொடர்ந்து சபரி பாண்டி பலமுறை முயற்சித்தும் காதல் கைகூடவில்லை.

இந்த நிலையில் சபரி பாண்டி காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த சில வாரங்களாக விரக்தியுடன் இருந்தார்.

வாழ்க்கையில் வெறுப்படைந்த சபரி பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com