சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்

சென்னை ஐகோட்டுக்கு தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தலைமை நீதிபதி ஏபி சாஹி
தலைமை நீதிபதி ஏபி சாஹி
Published on

சென்னை:

பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஏ.பி.சாஹி, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இவரை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யலாம் என கொலிஜியம் சமீபத்தில் பரிந்துரை செய்தது.

இவர் நவம்பர் 13-ம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com