ஆந்திராவில் சோகம் - சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விழுந்து 8 பேர் பலி

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்து
பேருந்து கவிழ்ந்து விபத்து
Published on

ஐதராபாத்:

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மரேடுமில்லி பகுதியில் இருந்து சிந்துரு பகுதிக்கு ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.

அதில் 25க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

வால்மீகி கொண்டா பகுதி அருகே வந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைகுலைந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தனர்.

சுற்றுலா சென்ற பேருந்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com