

முதல்-அமைச்சர் எடப்பாடி அணி ஆதரவாளரான அன்வர்ராஜா எம்.பி. இன்று கூறியதாவது:-
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்ததாக செய்திகள் வந்தது.
இதனால் இந்த அரசுக்கு எந்த ஆபத்தும் கிடையாது.
ஏனென்றால் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை. முதல்-அமைச்சர் மீதுதான் நம்பிக்கை இல்லை என்று கூறி இருக்கிறார்கள். இதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க முடியாது.
இது உள்கட்சி விவகாரம். முதல்-அமைச்சரை தேர்ந்தெடுப்பது எம்.எல்.ஏ.க்கள் தான் இதில் கவர்னர் தலையிட இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.