

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் (வயது 73) மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 17-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக வருகிற 31-ந்தேதிக்குள் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.