

சேலம்:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி தலைமையில் தென் அழகாபுரம் பகுதியில் மகளிரணியினர் மற்றும் பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டடோர் தங்கள் வீடுகளின் முன்பு குடியுரிமை திருத்த சட்டம் வேண்டாம் என கோலங்கள் போட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கோலம் போட்டவர்களிடம் இதனை உடனடியாக அழிக்க வேண்டும். இல்லையெனில் மற்ற இடங்களில் கைது செய்வது போல் உங்களையும் கைது செய்வோம் இல்லையெனில் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.