வி‌ஷ உணவு கொடுத்து 2 மகள்கள் கொலை- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தந்தையும் பலி

அந்தியூர் அருகே விஷ உணவு கொடுத்து 2 மகள்களை பலியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தையும் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கரன்
சிக்கரன்
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி செங்குளத்தை சேர்ந்தவர் சிக்கரன் (வயது 37). கூலி தொழிலாளி.

இவரது மனைவி பெயர் சிக்கரா (32). இவர்களுக்கு சுதா (15), மேகலா (10) என்ற மகள்கள் இருந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே சிக்கரனும், சிக்கராவும் பிரிந்தனர். சுதாவும், மேகலாவும் சிக்கரனுடன் வளர்ந்தனர்.

சுதா முகாசி புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், மேகலா அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் உண்டு உறைவிட பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். 2 பேரும் விடுதியில் தங்கி படித்தனர்.

சிக்கரன் தீராத நோய் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.இதனால் மன வேதனை அடைந்த சிக்கரன் நோயால் தான் இறந்துவிட்டால் தனது மகள்கள் அவதிப்படுவார்களே என்று என எண்ணினார்.

இந்த நிலையில் விடுதிகளில் இருந்து சுதாவையும், மேகலாவையும் அழைத்து வந்தார். பின்னர் 3 பேரும் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கொல்லம ரத்தான் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு சிக்கரன் உணவில் வி‌ஷம் கலந்து மகள்களுக்கு சாப்பிட கொடுத்தார். சிக்கரனும் வி‌ஷம் கலந்த உணவை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மேகலா பரிதாபமாக இறந்தார்.

மேல் சிகிச்சைக்காக சுதாவும், சிக்கரனும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சுதாவும் பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கரனுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சிக்கரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com