நல்லம்பள்ளி அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

நல்லம்பள்ளி அருகே முன்விரோத தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தயவாய் அள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவுரி (வயது 45). இவர்களது வீட்டின் அருகில் வசித்து வருபவர் மாதன் என்பவரது மனைவி மணியம்மாள் ஆவர்.

இந்த நிலையில் மணியம்மாள் மற்றும் கவுரி ஆகிய இருவருக்கும் முன்விரோதம் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாய்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதை அடுத்து ஆத்திரம் அடைந்த மணியம்மாள் அறிவாளால் கவுரியை தாக்கினார். இதில் கவுரியின் தலை மற்றும் கையில் பலத்த வெட்டு விழுந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கவுரியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில், மணியம்மாளை இண்டூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com