அன்னூர் அருகே கார் மோதி வியாபாரி பலி

அன்னூர் அருகே கார் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

மேட்டுப்பாளையம்:

அன்னூர் தென்னம் பாளையம் ரோடு அங்காள முதலியார் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). சாக்கு வியாபாரி. இவர் நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் பொகளூரில் உள்ள ஒருதனியார் கம்பெனி அருகே சென்றபோது முன்னால் சென்ற காரை கடக்க முயன்றார்.

அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com