அண்ணா பிறந்தநாள் - மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு

அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
அண்ணா பிறந்தநாள் - மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு
Published on

கரூர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டப்பிரிவின் சார்பில் முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி கரூர் தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளை கரூர் மாவட்ட கல்வி அதிகாரி கனகராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. 10, 15, 20 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

போட்டிகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் ஆர்வத்துடன் இலக்கை நோக்கி சென்றனர்.இந்த போட்டிகளில் மொத்தம் 78 மாணவர்களும், 62 மாணவிகளும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி புண்ணியமூர்த்தி செய்திருந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com