பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று : அங்கிதா போராடி வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா போராடி வெற்றி பெற்றார்
இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா
இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா
Published on

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோவனா ஜோவிச்சை (செர்பியா) போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் 2 மணி 47 நிமிடங்கள் நீடித்தது. ரெய்னா அடுத்து ஜப்பானின் குருமி நராவை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 5-7, 2-6 என்ற நேர் செட்டில் டிரிஸ்டன் லமாசினிடம் (பிரான்ஸ்) தோற்று வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com