மும்பை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா காலிறுதியில் தோல்வி

மகளிருக்கான மும்பை ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா தோல்வியடைந்து வெளியேறினார்.
மும்பை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா காலிறுதியில் தோல்வி
Published on

மகளிருக்கான மும்பை ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. 32 வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த தொடருக்கு இந்தியா சார்பில் நான்கு வீராங்கனைகள் வைல்ட் கார்ட் முறையில் தகுதிபெற்றனர். இதில் அன்கிதா ரெய்னா மட்டுமே முதல் சுற்று போட்டியில் பெற்றார்.

நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் அன்கிதா ரெய்னா, தாய்லாந்தின் பியாங்டார்ன் பிலிப்யூச்சை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அன்கிதா, பிரான்சின் அமாண்டலின் ஹீசை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை அமாண்டலின் ஹீஸ் 6-3 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இரு வீராங்கனைகளும் சரிசமமான ஆட்டத்தை வெளிகாட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com