மும்பை ஓபன் டென்னிஸ்: இந்திய விராங்கனை அன்கிதா ரெய்னா காலிறுதிக்கு முன்னேற்றம்

மகளிருக்கான மும்பை ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி போட்டிக்கு இந்தியா வீராங்கனை அன்கிதா ரெய்னா முன்னேறியுள்ளார்.
மும்பை ஓபன் டென்னிஸ்: இந்திய விராங்கனை அன்கிதா ரெய்னா காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மகளிருக்கான மும்பை ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. 32 வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த தொடருக்கு இந்தியா சார்பில் நான்கு வீராங்கனைகள் வைல்ட் கார்ட் முறையில் தகுதிபெற்றனர். இதில் அன்கிதா ரெய்னா மட்டுமே முதல் சுற்று போட்டியில் பெற்றார்.

அன்கிதா ரெய்னா, நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் தாய்லாந்தின் பியாங்டார்ன் பிலிப்யூச்சை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் அன்கிதா கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது சுற்றியும் 6-2 என்ற செட்கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற அன்கிதா காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com