அனிதா மரணம்: மறியலில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் கைது

மாணவி அனிதா தற்கொலையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
அனிதா மரணம்: மறியலில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் கைது
Published on

நீட் தேர்வு குழப்பத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய மாநில அரசுகளை கண்டித்து சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. 100-க்கும் மேலான தொண்டர்களுடன் ஜி.ராமகிருஷ்ணன் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். மாணவியின் மரணத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

சுமார் ஒரு மணிநேரம் நடந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஷாளவாஷ், செல்லத்துரை, இரா. செல்வம் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. கீழ் பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகம் எதிரில் பூந்தமல்லி சாலை வரை அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாகவி பாரதியார் மக்கள் கட்சி தலைவர் வக்கீல் மயிலை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com