

பர்மிங்காம் :
இந்திய கிரிக்கெட் வாரிய இணைசெயலாளர் அமிதாப் சவுத்ரி பர்மிங்காமில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பிளே, கேப்டன் விராட்கோலி இடையே கருத்து வேறுபாடு இருப்பது போல் எனக்கு எதுவும் தெரியவில்லை. கற்பனை மற்றும் யூகத்தின் அடிப்படையில் இந்த செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நெருப்பு இல்லாமல் புகை வருமா? என்று கேட்கிறீர்கள். புகையை நான் பார்க்கவில்லை. எனது பயணத் திட்டத்தை (இங்கிலாந்து பயணம்) என்னை விட நீங்கள் அதிகம் அறிந்து வைத்து இருப்பது வியப்பாக இருக்கிறது. பயிற்சியாளர் தேர்வு விஷயத்தில் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. நமது அணி வீரர்கள் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள். புதிய பயிற்சியாளர் தேர்வு விவகாரத்தை கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பார்த்து கொள்ளும்’ என்றார்.