ராஜினாமா குறித்து யோசிக்கவில்லை: ஜிம்பாப்வே தோல்வி குறித்து இலங்கை கேப்டன் மேத்யூஸ்

ஜிம்பாப்வேக்கு எதிராக தொடரை இழந்து படுதோல்விடைந்துள்ளதால், கேப்டன் பதவியை ராஜினாமா செய்வது குறித்து யோசிக்கவில்லை என மேத்யூஸ் கூறியுள்ளார்.
ராஜினாமா குறித்து யோசிக்கவில்லை: ஜிம்பாப்வே தோல்வி குறித்து இலங்கை கேப்டன் மேத்யூஸ்
Published on

இந்நிலையில் ஹம்பன்தோடாவில் நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இலங்கை அணியை ஜிம்பாப்வே 203 ரன்களில் கட்டுப்படுத்தியது. பின்னர், 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே, 38.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி (3-2) வரலாற்றுச் சாதனைப் படைத்தது ஜிம்பாப்வே.

இலங்கையின் படுதோல்வியை அந்த அணியின் கேப்டன் மேத்யூஸால் ஜீரணிக்க முடியவில்லை. மிகவும் மோசமான தோல்வி என்பதால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போதைய நிலையில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வது குறித்து யோசிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜிம்பாப்வேக்கு எதிரான படுதோல்வி குறித்து மேத்யூஸ் கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிகவும் மோசமான தோல்வி. இந்த படுதோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. டாஸ் மற்றும் ஆடுகளத்தை தவறாக கணித்தது என எல்லாமே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது. இருந்தாலும் எந்த சாக்குபோக்கும் சொல்லக்கூடாது. ஜிம்பாப்வே அணியை நாங்கள் வெற்றி கொள்வதற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஜிம்பாப்வே வீரர்கள் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள.

தற்போது வரை நான் எனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து நினைக்கவில்லை. அதற்கு இன்னும் நேரம் உள்ளது. அதைப்பற்றி யோசிக்க கொஞ்சம் நேரம் தேவை. தேர்வாளர்களுடனும் பேச வேண்டியுள்ளது. இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com