மரக்காணம் அருகே அங்கன்வாடி ஊழியர் தற்கொலை

மரக்காணம் அருகே அங்கன்வாடி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

மரக்காணம்:

மரக்காணம் அருகே அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 26). அங்கன்வாடி ஊழியர். இவருக்கும் கூனிமேடு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சூர்யா கணவரை பிரிந்துச்சென்று தனது மகளுடன் அனுமந்தை மீனவர் குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். அங்கிருந்தபடியே அவர் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின் சூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை நேற்று காலை பார்த்த அவரது தாய் மற்றும் மகள் அதிர்ச்சி அடைந்து, கண்ணீர் வீட்டு கதறி அழுதனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com