அங்கன்வாடி ஊழியர்கள் - பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் - பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Published on

 திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பி.கண்ணகி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயலாளர் ஏ.பாலசுப்ரமணியம் துவக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத்துணைத்தலைவர் பாண்டிமாதேவி உரையாற்றினார். 

அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் எஸ்.கதிர்வேல், வட்ட பொருளாளர் டி.தனசேகரன், ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க கே.சங்கர், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு எம்.கணே‌ஷபாண்டியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.எஸ்.இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக கே.தமிழரசி நன்றி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com