குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடரில் ஆண்டி முர்ரே

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேயின் உடல்நிலை தேறியதையடுத்து, குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.
குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடரில் ஆண்டி முர்ரே
Published on

லண்டன்:

மும்முறை சாம்பியனான ஆண்டி முர்ரேவுக்கு கடந்த ஜனவரி மாதம் இடுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து, உடற்தகுதி பெற்ற நிலையில் இந்த மாதம் குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் விளையாட உள்ளார். ஆண்டி முர்ரே கடைசியாக ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடியிருந்தார். 

இதுபற்றி முன்னாள் நட்சத்திர வீரர் ஒருவர் கூறுகையில், “ஆண்டி முர்ரே மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் மிகச்சிறந்த வாய்ப்பாகும். கிராஸ் கோர்ட் மைதானத்தில் 5 முறை ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.

தற்போது  அவர் வலியிலிருந்து விடுபட்டுள்ளார் மற்றும் அவரது  உடல்நிலையிலும், பயிற்சி ஆட்டங்களிலும்  நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். மேலும் இரட்டையர் பிரிவில், ஸ்பெயின் நாட்டு வீரரான பெலிசியானோ லோபெசுடன் சேர்ந்து விளையாட உள்ளார்” என்றார்.

குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் இம்மாதம் 17 ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com