ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் செம்மரக்கட்டை கடத்தல்: 4 பேர் தப்பி ஓட்டம்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் செம்மரம் கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் செம்மரக்கட்டை கடத்தல்: 4 பேர் தப்பி ஓட்டம்
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே இன்று காலை கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் கவரைப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த சொகுசு கார் ஒன்று போலீசாரை கண்டதும் சற்று தொலைவாக நின்றது. காரின் அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் நின்றனர். சந்தேகம் அடைந்த போலீசார் காரின் அருகில் சென்றனர். உடனே காரில் இருந்த 2 பேரும் இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தனர். இதேபோல் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

சொகுசு காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் ஒரு டன் எடை உள்ள 13 செம்மரக்கட்டைகள் இருந்தது. அவற்றை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.

கவரைப்பேட்டை போலீசார் காரில் செம்மரக்கட்டை களை கடத்தி வந்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com