ஆண்டிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 28-ந்தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com