ஆண்டிப்பட்டி அருகே நிலப்பிரச்சினையில் விவசாயி மீது தாக்குதல்

ஆண்டிப்பட்டி அருகே நிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
விவசாயி மீது தாக்குதல்
விவசாயி மீது தாக்குதல்
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே ஆசாரிபட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்கரை ராஜ் (39) என்பவருக்கும் நிலபிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்ற உதயகுமாரை வழிமறித்து சக்கரை ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில்காயம் அடைந்த உதயகுமார் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரைராஜை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com