ஆண்டிப்பட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயியை கொல்ல முயற்சி- வாலிபர் கைது

ஆண்டிப்பட்டி அருகே தலையில் கல்லைப் போட்டு விவசாயியை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள மூலக்கடையை சேர்ந்தவர் பசும்பொன் (வயது50). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று பசும்பொன் அங்கிருந்த ஒரு கோவில் வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற சுரேஷ் அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்ய முயன்றார்.

படுகாயம் அடைந்த பசும்பொன் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com