ஆண்டிப்பட்டி அருகே நில தகராறில் கோஷ்டி மோதல்

ஆண்டிப்பட்டி அருகே நிலத் தகராறில் பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே நில தகராறில் கோஷ்டி மோதல்
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அருகவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். அதே பகுதியைச் சேர்ந்தவர் வனராஜ். இவர்களிடடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. நேற்று சர்வேயர் மூலம் பிரச்சினைக்குரிய நிலம் அளக்கப்பட்டது.

அப்போது இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. உடனடியாக சர்வேயர் நிலத்தை அளப்பதை நிறுத்தி விட்டு கிளம்பினார். அக்கம் பக்கம் உள்ளவர் சமரசம் செய்தனர். ஆனாலும் மீண்டும் இது தொடர்பாக பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல்லாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து கடமலைக் குண்டு போலீசில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். அதனடிப்படையில் முருகன், இளங்கோவன், வீமன் மற்றொரு தரப்பைச் சேர்ந்த வனராஜ், அவரது மகன் ஜெயக்குமார், ஜெயராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com