ஆண்டிப்பட்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் துணிகர கொள்ளை

ஆண்டிப்பட்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் துணிகர கொள்ளை
Published on

தேனி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு முனியாண்டி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் தெய்வம். இவர் பஞ்சாப்பில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அம்மு (வயது30).

சம்பவத்தன்று அம்மு தனது வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டர். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1000 கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அம்மு கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த செல்வம் (25) என்பவர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வரவே அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com